சென்னை- தூத்துக்குடி இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும்: துணை ஜனாதிபதிக்கு மனு

மதுரை- சென்னை இடையே வாரத்தில் இரு நாட் கள் இயக்கப்படும் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை- தூத்துக்குடி இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும்: துணை ஜனாதிபதிக்கு மனு
Published on: 

தூத்துக்குடி,

தமிழகத்தில் சென்னை சென்டிரல் மைசூரு, சென்னை சென்டிரல் சென்னை எழும்பூர்-நெல்லை, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் உள்பட 8 வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளிடம் ஏகோபித்த ஆதரவை பெற்றதால் புதிய வழித்தடங்களிலும் வந்தே பாரத் ரெயில்களை இயக்க பயணிகள் மத்தியில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன.

இந்த நிலையில், சென்னை- தூத்துக்குடி இடையே வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம், இந்திய வர்த்தக தொழிற்சங்கம், அகில இந்திய வர்த்தக தொழிற்சங்கம், தூத் துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கம், தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகிய சங்கங்களின் சார்பில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மனுவில், தூத்துக்குடி-சென்னை இடையே பகல் நேர இன்டர் சிட்டி ரெயில் அல்லது வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் இயக்கப்படும் தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ரெயிலை தினசரி இயக்க வேண்டும். மதுரை- மும்பை லோக் மான்யா திலக் விரைவு ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். மதுரை- சென்னை இடையே வாரத்தில் இரு நாட் கள் இயக்கப்படும் ரெயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

இதே போன்று தூத்துக்குடி எம்பவர் இந்தியா அமைப்பின் செயல் இயக்குநர் சங்கர், பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி உள்ள மனுவில், 'திருவனந்தபுரம் வடக்கு- நாகர் கோவில் பயணிகள் ரெயில் சேவையை நாகர்கோவில் டவுன் வழியாக தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். விழிஞ்ஞம் துறைமுகம் மற்றும் தூத்துக்குடி துறைமுகம் இடையே நேரடி ரெயில் இணைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளார்.

X