

சேலம்,
ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் முக்கிய வழித்தடங்களில் சிறப்பு ரெயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து சேலம் வழியாக போத்தனூருக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி தன்பாத்-போத்தனூர் சிறப்பு ரெயில் நாளை (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு தன்பாத்தில் இருந்து புறப்பட்டு காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 16-ந் தேதி காலை 7.10 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 7.15 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர் வழியாக காலை 11.20 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.