ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நடவடிக்கை: இந்திய ராணுவத்தை நினைவு கூர்ந்து போற்றுவோம் - நயினார் நாகேந்திரன்

தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எதிரான நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நமது பாரத தேசத்தின் உறுதிக்குத் தலைவணங்குவோம்!
ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நடவடிக்கை: இந்திய ராணுவத்தை நினைவு கூர்ந்து போற்றுவோம் - நயினார் நாகேந்திரன்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

பஹல்காமில் அப்பாவி இந்தியர்களை மதத்தின் பெயரால் கொடூரமாகக் கொலை செய்த பயங்கரவாதிகளுக்கு நமது இந்திய இராணுவத்தினர் கொடுத்த தக்க பதிலடியான ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்று இன்றோடு ஓராண்டாகிறது.

பயங்கரவாதத்தால் தனது திலகத்தை இழந்த ஒவ்வொரு பாரத மகளுக்கும் நமது பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அளித்த வாக்குறுதியை நிலைநாட்டும் விதமாக, பயங்கரவாதத்தின் வேரை அழிக்க பாகிஸ்தானின் உள்ளேயே சென்று தீவிரவாத முகாம்களைத் தகர்த்தெறிந்த நமது இந்திய ராணுவத்தை நினைவு கூர்ந்து போற்றுவோம்!

தீவிரவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எதிரான நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நமது பாரத தேசத்தின் உறுதிக்குத் தலைவணங்குவோம்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com