2-ஆம் தலைநகர் குறித்த அமைச்சர்களின் கருத்து அரசின் கருத்தல்ல - முதலமைச்சர் பழனிசாமி

2-ஆம் தலைநகர் குறித்த அமைச்சர்களின் கருத்து அரசின் கருத்தல்ல என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
2-ஆம் தலைநகர் குறித்த அமைச்சர்களின் கருத்து அரசின் கருத்தல்ல - முதலமைச்சர் பழனிசாமி
Published on

தருமபுரி,

தமிழகத்தில் கடந்த ஒருவாரமாகவே 2 ஆம் தலைநகர் குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக தமிழக வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரையை 2 ஆம் தலைநகரமாக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். அவருக்கு ஆதரவாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூவும் இதே கருத்தை கூறியிருந்தார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜனோ திருச்சியை 2 ஆம் தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அமைச்சர்களின் அடுத்தடுத்த கருத்தால் 2-ஆம் தலைநகர் குறித்த விவாதங்கள் அதிகரித்தன. சமூக வலைத்தளங்களிலும் நெட்டிசன்கள் இதுபற்றி அதிகம் கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

இந்த நிலையில், முதல்வர் பழனிசாமி இது பற்றி கூறும் போது, 2ஆம் தலைநகர் குறித்த அமைச்சர்களின் கருத்து அரசின் கருத்தல்ல, அவரவர்களின் தனிப்பட்ட கருத்து என்றார். மேலும், இந்தி 3-வது மொழியாக வந்த கோவை பள்ளி விண்ணப்பம் போலியானது எனவும் முதல்வர் விளக்கம் அளித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com