கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு

தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு
Published on

சென்னை,

மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்திற்காக விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களின் வங்கிக்கணக்கிற்கு மாதந்தோறும் 15-ம் தேதி 1,000 ரூபாயை தமிழக அரசு செலுத்தி வருகிறது.

இந்த நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, இது தொடர்பாக அவர் கூறியதாவது;

"கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதியான பயனாளிகள் யாரும் விடுபட்டுவிடக்கூடாது என்று முதல்- அமைச்சர் கூறியுள்ளார். தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்.

இதனை உதவித்தொகையாக கொடுக்கவில்லை. உரிமைத்தொகையாக கொடுக்கிறோம். கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஜனவரி முதல் அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்." இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com