வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

காஞ்சிபுரம்,

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மற்றும் தோழமை கட்சிகளின் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது

காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், சென்னை வடக்கில் கே.எஸ்.அழகிரி, சென்னை தெற்கில் வைகோ, கடலூரில் திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தன்னை விவசாயி எனக் கூறும் முதல்வர் தான் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாவை ஆதரிக்கிறார். மத்திய அரசு புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கி கொண்டு இருக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டத்துக்கு அதிமுக துணை போய் உள்ளது. இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சுமார் 3700 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று தெரிவித்தார்.

3 சட்டங்களை திரும்பப்பெறக் கோரி பச்சைத் துண்டு, பச்சை நிற மாஸ்க் அணிந்தபடி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com