காதலுக்கு எதிர்ப்பு: காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த போலீஸ் காதல் ஜோடி...!

பாதுகாப்பு கேட்டு போலீஸ் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்து உள்ளனர்.
காதலுக்கு எதிர்ப்பு: காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்த போலீஸ் காதல் ஜோடி...!
Published on

ஓமலூர்,

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பொம்மியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காவேரி. இவரது மகன் கார்த்திகேயன்(வயது 29). இவர் சென்னை ஆவடியில் போலீசாக பணியாற்றி வருகிறார்.

இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் மருதம் பகுதியை சேர்ந்த வேம்பையா மகள் ரம்யா (23) சென்னை ஆவடி போலீசாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் கார்த்திகேயன்-ரம்யா ஆகிய இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இதனை அறிந்த ரம்யாவின் பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

இதனை அடுத்த கார்த்திகேயன்-ரம்யா காதல் ஜோடி சென்னையில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து சமரசம் செய்து வைத்தார். பின்னர் காதலனுடன் பெண் போலீசாரை அனுப்பி வைத்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com