

சென்னை,
சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தனித் தீர்மானத்தை அமைச்சர் அருண்ராஜ் மொழிந்தார். இந்த தீர்மானத்துக்கு அதிமுக, பாமக, திமுக உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து பேசினார்கள். இதற்கிடையே, நீட் ரத்து தீர்மானத்துக்கு பாஜக எம்எல்ஏ போஜராஜன் எதிர்ப்பு தெரிவித்தார்.
இது தொடர்பாக சட்டசபையில் போகராஜன் பேசியபோது, ”நீட் தேர்வுக்கு தயாராகும் படி மாணவர்களுக்கு தரமான பயிற்சி மையங்களை அரசு உருவாக்க வேண்டும். மாணவர்களை உற்சாகப்படுத்தும் திட்டத்தை கொண்டு வாருங்கள். இந்த தீர்மானத்திற்கு உடன்படாமல், வெளிநடப்பு செய்கிறேன்.” என்றார்.