தவெக அரசு தொடர்வதற்கு எதிர்ப்பு - எடப்பாடி பழனிசாமி

அதிமுகவின் ஒரு தரப்புக்கு மட்டும் விஜய் ஆதரிப்பது ஏற்புடையதல்ல என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
தவெக அரசு தொடர்வதற்கு எதிர்ப்பு - எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற இருதலைவர்களையும் குறிப்பிட்டுதான் மக்களை சந்தித்து 47 எம்.எல்.ஏ.க்கள் வெற்றி பெற்றுள்ளனர். அதிமுக ஆட்சி உருவாகும் என நினைத்து தான் மக்கள் இரட்டை இலைக்கு வாக்களித்துள்ளனர், 47 தொகுதிகளிலும் வெற்றியும் பெற்றோம்.

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சி பொற்கால ஆட்சி, அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்தது. அ.தி.மு.க.வில் சில கருத்து வேறுபாடுகள் இருக்கும் நிலையில் ஒரு தரப்பை முதலமைச்சர் ஆதரிப்பது ஏற்புடையதல்ல. குதிரை பேரம் நடப்பதாக சந்தேகிக்கிறேன். 47 பேர் இரட்டை இலை சின்னத்தில் வென்றவர்கள்.

66 சதவீதம் பேர் த.வெ.க.வுக்கு வாக்களிக்கவில்லை. அதிமுகவில் ஒரு சிலருக்கு அமைச்சர் பதவி கொடுப்பதாக ஆசை காட்டுவதாக தகவல் வருகிறது. தூய்மையான ஆட்சி நடத்துவதாக கூறியிருக்கிறீர்கள்; அந்த எண்ணத்தில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. த.வெ.க. அரசு தொடர்வதற்கு ஆதரவு அளிக்கவில்லை" என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com