பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: காங்கிரசார் இன்று போராட்டம்

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் இன்று போராட்டம் நடத்த உள்ளனர்.
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: காங்கிரசார் இன்று போராட்டம்
Published on

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: காங்கிரசார் இன்று போராட்டம்

சென்னை,

பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-

கொலை செய்தவர்கள் தமிழர்கள். அவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். அதற்காக அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள்.பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தமிழக சிறைகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை செய்யப்படாமலேயே இருக்கிறார்கள். அவர்களை விடுதலை செய்ய வே ண்டும் என்ற குரல் ஏன் எழவில்லை ? அவர்களெல் லாம் தமிழர்கள் இல்லையா? ராஜீவ்காந்தியை கொலை செய்தவர்கள் மட்டும் தான் தமிழர்களா? தமிழ் உணர்வு உள்ளவர்கள் இதற்கு பதிலளிக்க வேண்டும்.

நம்முடைய மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் 19-ந்தே தி (இன்று) காலை 10 மணிக்கு காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியில் முக்கியமான இடத்தில் வெள்ளை துணியால் வாயை கட்டிக்கொண்டு காலை 10 மணியில் இருந்து 11 மணி வரை அறப்போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com