வி.எச்.பி ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கைது

மதுரை திருமங்கலம் அருகே ஏ.பாறைப்பட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டார். #VishvaHinduParishad #Tirunelveli
வி.எச்.பி ரத யாத்திரைக்கு எதிர்ப்பு: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கைது
Published on

மதுரை,

விசுவ இந்து பரிஷத் அமைப்பின் ஆதரவு அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ராமராஜ்ய ரத யாத்திரை தொடங்கியது. இந்த ரத யாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்து கேரளா மாநிலத்தில் இருந்து நெல்லை மாவட்ட எல்லையான புளியரை வழியாக தமிழகம் வருகிறது.

இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த ரத யாத்திரைக்கு எதிராக நெல்லை மாவட்ட கலெக்டரிடமும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நெல்லை மாவட்டத்தில் வரும் 23 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செங்கோட்டையில் ராமராஜ்ய ரத யாத்திரை தடுப்பு மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளார். போராட்டத்திற்கு செல்லும் வழியில் மதுரை திருமங்கலம் அருகே உள்ள ஏ.பாறைப்பட்டியில் திருமாவளவன் கைது செய்யப்பட்டார். முன்னதாக, போராட்டத்தில் பங்கேற்க சென்ற மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவஹிருல்லா மற்றும் வேல்முருகன் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com