பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்,டிடிவி தினகரன் இருக்க வேண்டும் - அண்ணாமலை பேட்டி


பாஜக கூட்டணியில் ஓபிஎஸ்,டிடிவி தினகரன் இருக்க வேண்டும் - அண்ணாமலை பேட்டி
x

சனிக்கிழமைகளில் மட்டும் தவெக தலைவர் விஜய் பரப்புரை செய்வேன் என்பது ஏற்கத்தக்கதல்ல என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மதுரை,

மதுரையில் தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

களத்தில் 24 மணி நேரம் தவெக செயல்பட வேண்டும். வேகத்தை களத்தில் காட்டினால் தான் மக்கள் நம்புவர். சனி, ஞாயிறுதான் சுற்றுப்பயணம் என சொல்கின்றனர். நாங்களே மாற்று எனச் சொல்லும் தவெக, சனிக்கிழமை மட்டுமின்றி, முழு நேர அரசியல் செய்யட்டும். அரசியல் செய்வோர் முழுநேரமாக அரசியலில் பணியாற்ற வேண்டும். காவல் துறையை குறை சொல்வதை விட்டுவிட்டு, நீதிமன்றத்தில் தவெக அனுமதி வாங்கலாமே?

ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகிய இருவருமே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். வருத்தத்தில் முடிவு எடுத்திருப்பார்கள்; கொஞ்சம் பொறுத்திருப்போம்; காலம் கனிந்து வரட்டும். டிடிவி தினகரன் நல்ல தலைவர். நயினார் நாகேந்திரனுக்கும், டிடிவி தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருக்காது. மக்களின் எதிர்ப்பார்ப்பு நவம்பர், டிசம்பரில் வெளிப்படும் என்றார்.

1 More update

Next Story