அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பி.எஸ். போட்டியிட்டது சரியா? பொன்னையன் விளக்கம்

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் அ.தி.மு.க. மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பொன்னையன் கலந்து கொண்டு பேசுகிறார்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓ.பி.எஸ். போட்டியிட்டது சரியா? பொன்னையன் விளக்கம்
Published on

அதில், எம்.ஜி.ஆர். கட்சியில் இப்போது நம்பியார் காட்சிகள் அரங்கேறுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், இது ஊடகங்கள் கூறும் குற்றச்சாட்டு என்றும், அ.தி.மு.க. உட்கட்சி தேர்தல் முறைப்படி அறிவிக்கப்பட்டு ஜனநாயக முறைப்படியே நடைபெற்றது என்றும் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக 5 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருப்பவருக்கு மட்டுமே வாக்களிக்க முடியும் என்றால் 2017-ல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் எப்படி ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட்டார் என்ற கேள்விக்கு, அவர் பதிலளிக்கும் போது தர்மயுத்தம் செய்து தாய் கழகத்தில் இணைந்தபோது ஓ.பி.எஸ். மீது கட்சி எடுத்த நடவடிக்கைகள் அத்தனையும் நீக்கப்பட்டது என்ற நிபந்தனையின் அடிப்படையில்தான் இணைந்தார்.

ஆகவே அவர் முழு தகுதியின் அடிப்படையில்தான் போட்டியிட்டார் என்றும் கூறினார். மேலும் சசிகலாவும், தினகரனும் தங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை என்றும், அவர்களுக்கு மக்கள் செல்வாக்கே கிடையாது என்றும் கூறினார்.

வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. மேற்கொள்ளவிருக்கும் யுக்திகள் உள்ளிட்ட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு விளக்கமாக பதில் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com