பயனாளிக்கு வீடு கட்டுவதற்கான ஆணை

சோளிங்கரில் பயனாளிக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
பயனாளிக்கு வீடு கட்டுவதற்கான ஆணை
Published on

சோளிங்கர்,

சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், சோளிங்கர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளத்தேரி சித்தாதூரை சேர்ந்த ரஜினி என்பவருக்கு பழங்குடியினர் நல திட்டம் 2022 -2023 ஆண்டு நிதியில் இருந்து ரூ.4 லட்சத்து 37 ஆயிரத்தில் வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார் கலந்து கொண்டு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கினார்.

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வஜ்ரவேல், சித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் ராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் மாரிமுத்து, ராமன், முனியம்மாள் பிச்சாண்டி, கோவிந்தராஜ் மற்றும் அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com