இயற்கை மருத்துவம், யோகா மருத்துவர்கள் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்த உத்தரவு ரத்து

இயற்கை மருத்துவம், யோகா மருத்துவர்கள் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்த உத்தரவை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இயற்கை மருத்துவம், யோகா மருத்துவர்கள் பணிக்கான காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்த உத்தரவு ரத்து
Published on

சென்னை,

தமிழகத்தில் காலியாக இருந்த மூன்று இயற்கை மருத்துவம் மற்றும் யோகா மருத்துவர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று மருத்துவ தேர்வு வாரியம், 2020-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக அப்போது தேர்வு நடத்தப்படவில்லை. பின்னர், இந்த காலியிடங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பின் அடிப்படையில், 2025 மார்ச் மாதம் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், காலியிடங்களின் எண்ணிக்கையை 35-ல் இருந்து 54 ஆக அதிகரித்து கடந்த ஏப்ரல் மாதம் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து சித்தார்த், அண்ணாமலை, அமிர்த செல்வராஜன் ஆகிய மருத்துவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அசாதாரண மற்றும் அவசர சூழ்நிலைகளின்போது காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும். இந்த வழக்கில் அதுபோல அசாதாரண சூழல் ஏதுமில்லை எனக் கூறி, காலியிடங்களின் எண்ணிக்கையை 35-ல் இருந்து 54 ஆக அதிகரித்த அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட்டார்.

மேலும் தேர்வு நடைமுறைகள் முடிந்த பின் காலியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. இதை அனுமதித்தால், பின்னாளில் தகுதி பெற்று வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வு அடிப்படையில் 35 காலியிடங்களை நிரப்பிக் கொள்ள அனுமதித்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com