

சிவகங்கை,
சிவகங்கை மாவட்டத்தில் அனுமதி பெறாமல் விதிகளை மீறி செயல்பட்டு வந்த 16 தனியார் மழலையர் பள்ளிகளை மூட மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மழலையர் பள்ளிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், உரிய அனுமதி பெறாமல் விதிகளை மீறி 16 தனியார் மழலையர் பள்ளிகள் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, அந்த 16 பள்ளிகளையும் உடனடியாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உத்தரவை மீறி தொடர்ந்து பள்ளிகள் செயல்படுவது கண்டறியப்பட்டால், பள்ளி நிர்வாகத்தின் மீது சட்டப்படி கடுமையான குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.