கிராமப்புற சாலைகளில் விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க உத்தரவு

கிராமப்புற சாலைகளில் விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற சாலைகளில் விபத்துகளை தவிர்க்க வேகத்தடை அமைக்க உத்தரவு
Published on

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கிராமப்புற சாலைகளில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்களில் சாலை பாதுகாப்பு தொடர்பான வேகத்தடை அமைக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, போலீஸ் நிலையம், அஞ்சல் நிலையம், வங்கி மற்றும் சந்தைப்பகுதிகளில் வாகனங்களினால் விபத்து ஏற்படுவதை தவிர்த்திட வேகத்தடை அமைத்திட வேண்டும். வேகத்தடை அமைத்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வாகனங்களில் செல்லும் போது விபத்துகள் ஏற்படாமல் இருக்க மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என கலெக்டர் ரமணசரஸ்வதி கேட்டு கொண்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com