

தஞ்சாவூர்,
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசுடைமையாக்கப்படும் சொத்துக்களின் விவரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் வ.உ.சி. நகர் முதல் தெருவில், சுமார் 26 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இளவரசி மற்றும் சுதாரகரனுக்கு சொந்தமான சொத்து பறிமுதல் செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.