கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் திறந்துவிட ஆணை - நீர்வளத்துறை

அணைகளிலிருந்து 01.06.2026 முதல் 28.02.2027 வரை வினாடிக்கு 850 கன அடி வீதம் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு தலைமை செயலகம்
Published on

கன்னியாகுமரி,

தமிழக நீர்வளத்துறையின் அரசு செயலாளர் வெளியிட்டு உள்ள செய்தியில்:-

தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் I மற்றும் II அணைகளிலிருந்து 01.06.2026 முதல் 28.02.2027 வரை வினாடிக்கு 850 கன அடி வீதம் தேவைக்கேற்ப தண்ணீர் இருப்பை பொறுத்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

பாசன வசதி

இதன் மூலம் கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம், கல்குளம் வட்டம், கிள்ளியூர் வட்டம், திருவட்டார் வட்டம், விளவங்கோடு வட்டம் மற்றும் அதனை சார்ந்த கிராமங்களில் உள்ள 79000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com