பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு

மொத்தம் 121 நாட்களுக்கு 6086.83 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க உத்தரவு
Published on

சென்னை,

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளான பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகள் வேகமாக உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகளின் பாசனத் தேவைக்காக பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

மொத்தம் 121 நாட்களுக்கு 6086.83 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 36,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். நீர் இருப்பை பொறுத்து தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com