சீர்மரபினருக்கு ஒரே சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி: சு.வெங்கடேசன் எம்.பி

68 சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நன்றி என வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
சீர்மரபினருக்கு ஒரே சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி: சு.வெங்கடேசன் எம்.பி
Published on

சென்னை,

மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் ,

சீர்மரபினருக்கு DNC & DNTஎன இரண்டு சான்றிதழ்கள் வழங்குவதற்கு பதிலாக , தமிழகத்தில் DNT என்ற பிரிவின் கீழ் 68 சமூகங்களுக்கு ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற நீண்டநாள் கோரிக்கையை  சட்டமன்ற உறுப்பினர் தோழர் சின்னதுரை அவர்கள் சட்டமன்றத்தில் வலியுறுத்தி பேசினார். இந்நிலையில், 68 சமூக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு நன்றி. என்று பதிவிட்டுள்ளார் .

இதற்கு முன்னதாக, இந்த உத்தரவுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் கருணாஸ்சும் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com