உடல் உறுப்பு தானம்: முதல் அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன் - மநீம தலைவர் கமல்ஹாசன்

உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடல் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்ற முதல் அமைச்சரின் அறிவிப்புக்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானம்: முதல் அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன் - மநீம தலைவர் கமல்ஹாசன்
Published on

சென்னை,

உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடல் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்ற முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்புக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது;

பிரியத்திற்குரிய குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயர நிலையிலும், அவரது உடல் உறுப்புகளைத் தானம் செய்து பிற உயிர்களைக் காக்க முன்வருவது மகத்தான தியாகம்.

இந்தத் தியாகத்தைப் போற்றிடும் வகையில் உடல் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் எனும் தமிழக முதல் அமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இந்த அறிவிப்பு உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கும்." இவ்வாறு அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com