செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை - முதல் முறையாக நடந்தது

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை முதல் முறையாக நடந்தது.
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை - முதல் முறையாக நடந்தது
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரை சேர்ந்த 43 வயதான ஆண் ஒருவர் உத்திரமேரூர் அருகே நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் சாலையோர விபத்தில் படுகாயம் அடைந்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். சுயநினைவு இல்லாமல் இருந்தவருக்கு தேவையான சிகிச்சை அளித்தும் எந்த வித முன்னேற்றம் ஏற்படவில்லை. பின்னர் பரிசோதனைகள் மூலம் ஆய்வு செய்ததில் அவர் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவரது உறவினர்கள் உறுப்பு தானம் செய்ய சம்மதம் தெரிவித்த நிலையில் அவரது உடலில் இருந்து கல்லீரல், 2 சிறுநீரகம், மற்றும் 2 கருவிழிகள் அகற்றபட்டு மாற்று அறுவை சிகிச்சை தேவைபட்டவர்களுக்கு வழங்கப்பட்டது.

இத்தகைய அறுவை சிகிச்சை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக செய்யப்பட்டது. தமிழக அரசு மற்றும் தமிழ் நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஆஸ்பத்திரி முதல்வர் அனிதா மற்றும் சிறுநீரகவியல் துறைத்தலைவர் டாக்டர் ஸ்ரீகலா பிரசாத் தலைமையில் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com