எங்கள் கூட்டணி வலுவாக, வலிமையாக உள்ளது: எல்.முருகன்

திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளதாக எல்.முருகன் கூறினார்.
எங்கள் கூட்டணி வலுவாக, வலிமையாக உள்ளது: எல்.முருகன்
Published on

மதுரை,

மதுரையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசியதாவது;

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் மார்ச் 1-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த கூட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தை வீட்டிற்கு அனுப்புவதற்கான கூட்டமாக இருக்கும். பிரதமருடைய வருகை தி.மு.க.வை வீட்டிற்கு அனுப்பி விடும்.

எங்கள் கூட்டணி தான் பலமான கூட்டணியாக உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பார்களா இல்லையா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர்கள் எங்கு செல்வார்கள் என்பதும் தெரியவில்லை. ஆனால் எங்கள் கூட்டணி வலுவான கூட்டணியாக வலிமையான கூட்டணியாக உள்ளது. எங்களுடைய கூட்டணியின் தலைவர் எடப்பாடி பழனிசாமி பல கட்சிகளுடன் பேசி வருகிறார்.”

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com