அண்ணாமலை சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்பது எங்கள் ஆசை: வானதி சீனிவாசன்

சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
அண்ணாமலை சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்பது எங்கள் ஆசை:  வானதி சீனிவாசன்
Published on

கோவை,

கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் கூறியதாவது,

எங்களை பொறுத்தவரை அ.திமு.க.-பா.ஜ.க. கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டி பணிகளை செய்து வருகிறோம்.நான் எங்கு போட்டியிடுவது என்பது குறித்து கட்சி தலைமை தான் அறிவிக்கும்.எங்களை பொறுத்தவரை முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு அவர் சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்பது ஆசை.

நடிகர் கமல்ஹாசன் பாராளுமன்றத்தில் பேசியது குறித்து ஒன்றும் புரியவில்லை.அவர் பேசியது ஒன்றும் புரியாததால் தான் அவரை கோவை மக்கள் இங்கிருந்து அனுப்பி வைத்தார்கள்.தமிழகத்தை பொறுத்த வரை திராவிட மாடல் ஆட்சி தோல்வி அடைந்துவிட்டது. வருகிற சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com