எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான்: டிடிவி தினகரன்

எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் என்று அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

திருச்சி,

எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், அதிமுக தொடங்கப்பட்டது முதல் ஒற்றைத்தலைமையில்தான் பயணித்தது. மீண்டும் அது சரியாகும், தேர்தலில் வெற்றி, தோல்வி எந்த தடையும் ஏற்படுத்தாது. தங்கள் இலக்கை நோக்கி பயணிப்போம். எங்கள் முயற்சியும், சசிகலாவின் முயற்சியும் அதிமுகவை மீட்க வேண்டும் என்பதுதான். அதை நோக்கிதான் பயணம் செய்கிறோம். கொள்கைக்காக வந்தவர்கள் எங்களுடன் இலக்கை நோக்கி பயணிப்பார்கள், சுயநலத்திற்காக வந்தவர்கள் செல்கின்றனர். திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தபோது எதையெல்லாம் எதிர்த்துப் போராடினார்களோ அதை தற்போது மறந்து செயல்படுகிறார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com