கோபி அருகே கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோபி அருகே கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோபி அருகே கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
Published on

கடத்தூர்

கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணை உள்ளது. இங்கு தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும் போது ஈரோடு மாவட்டம் மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து விட்டு செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை, பண்டிகை விடுமுறை காலங்களில் அணையில் கூட்டம் அலைமோதும். தங்கள் குழந்தைகளுடன் வந்து குளித்து குதூகலிப்பார்கள்.

மேலும் அங்குள்ள பூங்காவில் விளையாடியும், அணை பகுதியில் விற்கப்படும் சூடான மீன் வறுவல்களை வாங்கி ருசித்தும் மகிழ்வார்கள். தற்போது கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையையொட்டி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆர்ப்பரித்து கொட்டும் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com