சம்பள பணம் பாக்கி வைத்ததால் ஆத்திரம்: ஒப்பந்ததாரரின் காரை திருடியவர் கைது

காரின் பேரில் கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற அனுப்பை தேடி வந்தனர்.
கைது
Published on: 

நெல்லை,

நெல்லை அருகே கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் ரூபிங் ஷீட் அமைக்கும் பணி நடந்தது.

இந்த பணியை கேரள மாநிலம் பாலக்காடு கொடைக்காடு கண்ணாடி பகுதியை சேர்ந்த ராஜன் மகன் நந்து என்பவர் ஒப்பந்தப்பணி எடுத்து செய்து வந்தார். அந்த நிறுவனத்தில் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பட்டுகாடு பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் அனுப் (39) என்பவர் வேலை பார்த்தார். அவருக்கு ஒப்பந்ததாரர் நந்து மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வந்ததாக கூறப் படுகிறது.

வழக்குப்பதிவு

இந்த நிலையில் அவர் வேலை சரிவர செய்யாததால் அவருக்கான சம்பள பணம் ரூ.30 ஆயிரம் பாக்கி வைக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அனுப், சம்பவத்தன்று நந்துவின் காரை திருடி சென்றாராம்.

இதுகுறித்து நந்து அளித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற அனுப்பை தேடி வந்தனர். இந்த நிலையில் 6 மாதங்களுக்கு பிறகு அவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து காரை பறிமுதல் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com