அரசு துறைகளில் 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து

கடந்த 13-ந் தேதி முதல் 22-ந்தேதி வரை வெளியிடப்பட்ட குறுகிய கால டெண்டர்களை த.வெ.க. அரசு ரத்து செய்துள்ளது.
அரசு துறைகளில் 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் ரத்து
Published on

கடந்த தி.மு.க. ஆட்சியில் பொதுப்பணித் துறையில் மேற்கொ ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதனால் டெண்டர்களை நிறுத்தி வைத்திருப்பதாகவும் அந்த துறையின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறினார். இந்தநிலையில், கடந்த 13-ந் தேதி முதல் 22-ந்தேதி வரை வெளியிடப்பட்ட குறுகிய கால டெண்டர்களை த.வெ.க. அரசு ரத்து செய்துள்ளது.

அந்த வகையில், ஊரக வளர்ச்சித்துறை, போக்குவரத்துத்துடை பொதுப்பணித்துறை, மின்சாரத்துறை, சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை உள்ளிட்ட துறைகளில் போடப்பட்டு இருந்த 100-க்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள், நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த ஆட்சியில் குறுகிய டெண்டர்கள் மூலம் பண களை மேற்கொள்ள கூடாது என்ற அறிவுறுத்தல், அதிகாரிக ளுக்கு வழங்கப்பட்ட நிலையில் பல்வேறு டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஏற்கனவே சென்னை மாநகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி துறை யில் குறுகிய கால டெண்டர் வெளியிட்ட அதிகாரிகள் சஸ் பெண்டு செய்யப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com