75 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 98 சதவீதத்துக்கு மேல் இடங்கள் நிரம்பின


75 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 98 சதவீதத்துக்கு மேல் இடங்கள் நிரம்பின
x

என்ஜினீயரிங் படிப்புகளில் சேர பெரும்பாலானவர்கள் ஆர்வம் காட்டியுள்ளனர்.

சென்னை,

என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த மாதம் (ஜூலை) தொடங்கியது. சிறப்பு பிரிவு, பொதுப் பிரிவு, அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவினருக்கான கலந்தாய்வு, துணை கலந்தாய்வு என அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், நேற்று எஸ்.சி.ஏ. பிரிவில் இருந்து எஸ்.சி. பிரிவுக்கு இடங்கள் மாற்றப்பட்டு, அதற்கான கலந்தாய்வும் நடந்து முடிந்தது.

அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 2025-26-ம் ஆண்டுக்கான கலந்தாய்வு நிறைவு பெற்று இருக்கிறது. மொத்தமாக 1,90,494 இடங்களில் 1,53,966 இடங்கள் நிரம்பியுள்ளன. அதன்படி, மீதம் 36,528 இடங்கள் காலியாக இருக்கின்றன. கடந்த ஆண்டு 49,579 இடங்கள் காலியாக இருந்தன. இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை பொறுத்தவரையில், கடந்த 6 ஆண்டுகளை காட்டிலும் நன்றாகவே நடந்து இருக்கிறது.

இதுமட்டுமல்லாமல், இதுவரை இல்லாத அளவில் 75 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 98 சதவீதத்துக்கு மேல் இடங்கள் நிரம்பியிருப்பதாக கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்தார். இதற்கான காரணம் குறித்து அவரிடம் கேட்டபோது, என்ஜினீயரிங் படிப்புகள் மீதான மோகம் அதிகரித்திருப்பது, நீட் தேர்வு இந்த ஆண்டு கடினமாக இருந்தது ஆகியவை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு கோர் என்ஜினீயரிங் படிப்புகளில் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் பெரும்பாலானவர்கள் சேர ஆர்வம் காட்டியுள்ளனர் என்றார்.

இதுதவிர 105 கல்லூரிகளில் 90 முதல் 97 சதவீத வரையிலான இடங்களும், 59 கல்லூரிகளில் 80 முதல் 90 சதவீத வரையிலான இடங்களும், 103 கல்லூரிகளில் 50 முதல் 79 சதவீத வரையிலான இடங்களும், 74 கல்லூரிகளில் 10 முதல் 49 சதவீத வரையிலான இடங்களும் நிரம்பியுள்ளன. இதுதவிர 7 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை இருந்துள்ளது.

1 More update

Next Story