ஈரோட்டில் கடந்த ஒரு மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 3,464 பேர் மீது வழக்கு பதிவு; ரூ.6¼ லட்சம் அபராதம் வசூல்

ஈரோட்டில் கடந்த ஒரு மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 3 ஆயிரத்து 464 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.6¼ லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.
ஈரோட்டில் கடந்த ஒரு மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 3,464 பேர் மீது வழக்கு பதிவு; ரூ.6¼ லட்சம் அபராதம் வசூல்
Published on

ஈரோட்டில் கடந்த ஒரு மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 3 ஆயிரத்து 464 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

விதிமுறை மீறல்

ஈரோடு மாநகர் பகுதியில் தெற்கு மற்றும் வடக்கு போக்குவரத்து போலீசார் ஆங்காங்கே வாகன சோதனையில் ஈடுபட்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த ஜூலை மாதத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 3 ஆயிரத்து 464 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதாக 113 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் வாகனங்கள் ஓட்டியதாக 2 ஆயிரத்து 165 வழக்குகளும், ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்து பயணம் செய்ததாக 1,186 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

ரூ.6 லட்சம் அபராதம் வசூல்

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வந்தது, வாகனங்களில் அதிக பாரம் ஏற்றியது உள்பட கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 ஆயிரத்து 464 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளன.

மேலும் அவர்களிடம் இருந்து, தெற்கு போக்குவரத்து போலீசார் ரூ.2 லட்சத்து 99 ஆயிரத்து 800 அபராதமும், வடக்கு போக்குவரத்து போலீசார் ரூ.3 லட்சத்து 35 ஆயிரத்து 200 அபராதம் என மொத்தம் ரூ.6 லட்சத்து 35 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com