மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின் பொறியாளர் அலுவலக கட்டிடம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின் பொறியாளர் அலுவலக கட்டிடம் அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, மின் பொறியாளர் அலுவலக கட்டிடம்
Published on

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட டி.எடையார் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம், ஏமப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி செந்தில், சுந்தரமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர்.

விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு டி.எடையார் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் உதவி மின் பொறியாளர் அலுவலக கட்டிடம், ஏமப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆகியவற்றை திறந்து வைத்து பேசினார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, நந்தகோபாலகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் பி.வி.ஆர்.விசுவநாதன், ஒன்றியக்குழுதலைவர் ஓம்சிவசக்திவேல், துணை தலைவர் கோமதி நிர்மல்ராஜ் ஒன்றிய விவசாய அணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி பக்தவச்சலு, பேச்சாளர் பரசுராமன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com