தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு ஓவைசி வேண்டுகோள்

மக்களின் பேராதரவுடன் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்று நான் நம்புகிறேன் என ஒவைசி கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு ஓவைசி வேண்டுகோள்
Published on

ஐதராபாத்,

தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்குமாறு ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக 'எக்ஸ்' வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சி சார்பில் நான் ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். தமிழக வாக்காளர்கள் தங்களது வாக்குகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணிக்கு செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழக மக்களின் பேராதரவுடன் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஏற்கனவே எங்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. எனவே, வரும் 23-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com