

தூத்துக்குடி,
கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சமீபத்தில் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தில் உள்ள குளிர்விக்கும் பகுதியில் திடீரென பழுது ஏற்பட்டது. இந்த பழுது நீக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று திரவ ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. இன்று (புதன்கிழமை) முதல் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளில் ஏற்றப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று கூறப்படுகிறது.