

தேவகோட்டை,
தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையத்தை கார்த்திக் சிதம்பரம் எம்.பி. திறந்து வைத்தார்.
ஆக்சிஜன் நிலையம்
தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி. முயற்சியில் டாடா குழுமத்தின் டி.சி.எஸ்.பவுண்டேசன் சார்பாக ரூ.1 கோடியே 27 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டுள்ளது. அதனை சிவகங்கை எம்பி. கார்த்தி சிதம்பரம் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:- கொரோனா காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டருக்கு எவ்வளவு தட்டுப்பாடு ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா முடிந்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே, அதை கருத்தில் கொண்டு டாடா குடும்பத்திடம் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேட்டு கொண்டதின் பேரில் நமது தொகுதிக்கு ரூ.4 கோடி ஒதுக்கி தந்தனர். அதில் ரூ.1 கோடியே 27 லட்சம் செலவில் தேவகோட்டையில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த எந்திரம் தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எவ்வித பழுதும் இல்லாமல் செயல்பட வேண்டும் என்றால் இதற்கு நிரந்தரமான டெக்னீசியன் நியமிக்க வேண்டும். அதற்கு ரோட்டரி சங்கம் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாங்களும் அதற்குண்டான ஏற்பாடுகளை செய்து தர தயாராக இருக்கின்றோம். அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வுக்கு வருகிற போது மட்டும் சுத்தம் செய்தால் கூடாது. தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என்றார். மாங்குடி எம்.எல்.ஏ. வாழ்த்தி பேசினார்.
பங்கேற்றவர்கள்
இதில் மருத்துவ இணை இயக்குனர் தர்மர், தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் செங்கதிர், மாவட்ட கவுன்சிலர் நாகனி செந்தில்குமார், சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் அப்பச்சி சபாபதி, நகர் காங்கிரஸ் கிழக்கு தலைவர் சஞ்சய், நகர் தி.மு.க. செயலாளர் பெரி.பாலமுருகன், காங்கிரஸ் மீரா உசேன், மாவட்ட துணைத்தலைவர் பூமிநாதன், மாநில இலக்கிய அணி செயலாளர் சுவாமிநாதன், பொதுச்செயலாளர் பெரி.மகேந்திரன், வட்டார காங்கிரஸ் முத்துமனோகரன், முத்துக்குமார், முத்துராமலிங்கம், சிரவளினாதன், ஜெய்னுதீன், சுப்பிரமணியன், ஜமால், பெத்து, முத்துவேல், குழந்தைச்சாமி, அழகு, நாகமதி பெரியசாமி, செபஸ்தி, பழனிச்சாமி, தேவகோட்டை நகர் காங்கிரஸ் வேலு, காளிதாஸ், சிராஜீதின், ராஜிவ், வீரமணி, சங்கர், ராமச்சந்திரன், நகர் மன்ற உறுப்பினர்கள் சேக், மனோபிரகாஷ், பவுல் ஆரோக்கியசாமி, பிச்சையம்மாள், விக்னேஷ்வரன், சுதா மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர்கள் ஜாகிர் உசேன், கருணாநிதி, இளங்கோ, மும்முடி நாதன், சரவணன் தமிழ், அரவிந்த், லெட்சுமணன், அப்துல் ஜாபர், அன்பு, இந்திய கம்யூனிஸ்டு நகர் செயலாளர் காமராஜ், வி.சி.க. நகர செயலாளர் அமுதன், ம.தி.மு.க. நகர் செயலாளர் சந்துரு, சட்டமன்ற அலுவலக மலாளர் இளங்கோ, தேவகோட்டை நகர வர்த்தக சங்கம், டாக்டர்கள் சங்கம், மருந்து வணிக சங்கம், நகைக்கடை சங்கம். ரோட்டரி கிளப், லயன்ஸ் கிளப், நடையாளர் சங்கம், ஜமாத் கமிட்டி உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.