

ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பும் வகையில்தான் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு உள்ளார். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இதுவரை 20 முறை எனக்கு சம்மன் அனுப்பினார்கள். நானும் விளக்கம் அளித்து உள்ளேன். ஆனால் இதுவரை என் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. காங்கிரஸ் கட்சியை அச்சுறுத்தவேண்டும், காங்கிரஸ் கட்சிக்கும், ப.சிதம்பரத்துக்கும் இருக்கும் நற்பெயரை கெடுக்கவேண்டும் என்பதற்காகவே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளனர். அடுத்தகட்டமாக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள டெல்லி செல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.