பழனி விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கூட்டு மோசடி: பெ.சண்முகம் குற்றச்சாட்டு

சிபிசிஐடி விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
பழனி விவகாரத்தில் அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கூட்டு மோசடி: பெ.சண்முகம் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

பழனி கோவில் நில மோசடி குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறியதாவது:-

பழனி கோவில் நில மோசடி என்பதில் மேலிருந்து கீழ் வரை பல அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். மோசடியில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு பெரிய முக்கிய பிரமுகராக இருந்தாலும் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

பழைய வழக்குகளை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் மறைத்து, நீதிமன்றத்தையே ஏமாற்றி இந்த மிகப்பெரிய மோசடியைச் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய மோசடி என்றே பழனி விவகாரத்தை சொல்லலாம். இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும்.

இந்த நில மோசடி விவகாரத்தில் அரசுக்கோ அல்லது அமைச்சர்களுக்கோ நேரடியாகத் தொடர்பு இருக்கிறது என்பதில் எங்களுக்கு உடன்பாடில்லை; அதுபோன்ற எந்த விவரங்களும் வரவில்லை. மாறாக, பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய அதிகாரிகளைக் கொண்டு வந்து வைத்துப் பத்திரப்பதிவு செய்துள்ளனர்.

அதிகாரிகள் மட்டத்தில் ஒரு கூட்டு மோசடி நடைபெற்றிருக்கிறது என்பதுதான் இப்போது வரை வந்துள்ள விவரம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரே நேரடியாகத் தலையிட்டு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, உயர்மட்ட அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இந்த மோசடியில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com