அரசு மருத்துவமனையில் பச்சிளம் பெண் குழந்தை கடத்தல் - பொள்ளாச்சியில் பரபரப்பு...!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அரசு மருத்துவமனையில் பச்சிளம் பெண் குழந்தை கடத்தல் - பொள்ளாச்சியில் பரபரப்பு...!
Published on

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் யூனிஸ்(வயது 28) கறிக்கடை வைத்து வியாபாரம் செய்துவருகிறார். இவரது மனைவி திவ்யபாரதி(25). இவர், கடந்த திங்கட்கிழமை பிரசவத்துக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் திவ்யபாரதிக்கு கடந்த புதன்கிழமை பெண் குழந்தை பிறந்தது. தாய் ,சேய் இருவரும் சிகிச்சைப் பிரிவில் இருந்த நிலையில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் குழந்தையை கடத்திச் சென்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் தாய் மற்றும் உறவினர்கள் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈட்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார். பின்னர், சம்பவம் நடந்த மருத்துவமனை பகுதிகளில் ஆய்வு நடத்திய சூப்பிரண்டு 6 தனிப்படைகள் அமைத்து விசாரணையை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.

மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com