அரவைக்காக 2000 டன் நெல்

கும்பகோணத்தில் இருந்து திருவள்ளூருக்கு அரவைக்காக 2000 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
அரவைக்காக 2000 டன் நெல்
Published on

கும்பகோணம்;

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கி வரும் தஞ்சையில் விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு பொதுவினியோக திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் திருநெல்வேலி, திருவள்ளூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. நேற்று கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்களில் இருந்து 2ஆயிரம் டன் நெல் 115 லாரிகளில் கும்பகோணம் ரெயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலின் 42 வேகன்களில் அரவைக்காக திருவள்ளூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com