நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து


நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
x

நடிகர் அஜித்குமாருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நாட்டின் உயிரிய விருதான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷண் ஆகிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதுகளை மத்திய அரசு நேற்று அறிவித்தது. அதன்படி, நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையொட்டி, நடிகர் அஜித்குமாருக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நாட்டின் உயரிய குடிமக்கள் விருதுகளுள் ஒன்றான 'பத்ம பூஷன்' விருது பெறத் தேர்வாகியுள்ள தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர், கலை, விளையாட்டு, டிரோன் வடிவமைப்பு என பல்துறைகளில் தனக்கென தனிமுத்திரை பதித்துள்ள அன்பு சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள். இன்னும் பல சிகரங்களைத் தொட்டு, நம் மாநிலத்திற்கும், நாட்டிற்கும் மென்மேலும் புகழ் சேர்க்க வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

அதே போல் கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் மற்றொரு பதிவில், "உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவராகத் திகழ்ந்து, தனது பல்வேறு சாதனைகளால் தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த அருமைச் சகோதரர் அஸ்வின் அவர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story