பத்மஸ்ரீ செப் தாமு மறைவு: நயினார் நாகேந்திரன் இரங்கல்

அவரது சேவையையும் சாதனைகளையும் பாராட்டி, பாரத அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.
நயினார் நாகேந்திரன்
Published on: 

சென்னை,

பிரபல சமையல் கலைஞரும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான செப் தாமு காலமானார். இது குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

இரங்கல்

பிரபல சமையல் கலைஞரும், சமையல் துறையில் தனக்கெனத் தனி முத்திரை பதித்தவருமான பத்மஸ்ரீ டாக்டர் செப் தாமு அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது.

தனது தனித்துவமான சமையல் திறமையாலும், எளிமையான அணுகுமுறையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாக சமையல் கலையை மக்களிடையே கொண்டு சேர்த்தவர். அவரது சேவையையும் சாதனைகளையும் பாராட்டி, பாரத அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவு சமையல் துறைக்கும், அவரை நேசித்த மக்களுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com