முறுவலிக்கும் முரண்கள்... திருமா, சீமான், தமிழிசையுடன் செல்பி எடுத்த திருச்சி சிவா - வைரலாகும் புகைப்படம்

திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு கட்சி தலைவர்களுடன் திமுக எம்.பி. திருச்சி சிவா செல்பி எடுத்துள்ளார்.
முறுவலிக்கும் முரண்கள்... திருமா, சீமான், தமிழிசையுடன் செல்பி எடுத்த திருச்சி சிவா - வைரலாகும் புகைப்படம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, தவெக, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவ வாய்ப்பு உள்ளது.

Also Read
தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட்: வணிகர் சங்க பேரமைப்பு பாராட்டு
முறுவலிக்கும் முரண்கள்... திருமா, சீமான், தமிழிசையுடன் செல்பி எடுத்த திருச்சி சிவா - வைரலாகும் புகைப்படம்

இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் பல்வேறு கட்சி தலைவர்களுடன் திமுக எம்.பி. திருச்சி சிவா செல்பி எடுத்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திருச்சி சிவா, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் திருச்சி விமான நிலையத்தில் சந்தித்த நிலையில் அனைவரும் சேர்ந்து செல்பி புகைப்படம் எடுத்துள்ளனர்.

Also Read
நெருங்கும் சட்டசபை தேர்தல்... தமிழகம் வரும் தலைமை தேர்தல் ஆணையர்
முறுவலிக்கும் முரண்கள்... திருமா, சீமான், தமிழிசையுடன் செல்பி எடுத்த திருச்சி சிவா - வைரலாகும் புகைப்படம்

திருச்சி சிவா எடுத்த இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில், "சற்று முன் திருச்சி விமான நிலையத்தில்.. 'முறுவலிக்கும் முரண்கள்'. அண்ணன் திருச்சி சிவா எடுத்த செல்பி" என்று தெரிவித்து பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com