மொளசி அருகேபெயிண்டரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது

மொளசி அருகேபெயிண்டரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது
Published on

பள்ளிபாளையம்:

மொளசி அருகே பெயிண்டரை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பெயிண்டர்

நாமக்கல் மாவட்டம் மொளசி அருகே உள்ள கோரைக்குட்டை பகுதியை சேர்ந்தவர் மாது. இவருடைய மகன் அருள்குமார் (வயது 20). பெயிண்டர். இவர்களுடைய உறவினரான சுரேஷ்குமார் (28) என்பவர் மும்பையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ஆடி பண்டிகையயொட்டி சுரேஷ்குமார் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு சுரேஷ்குமார் அருள்குமார் ஆகியேர் பேசி கொண்டிருந்தனர். அப்பேது சுரேஷ்குமார் தனக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து தருமாறு கேட்டதாக தெரிகிறது. அதற்கு அருள்குமார் கூறிய பதிலால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கைது

இதனை தொடர்ந்து தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த சுரேஷ்குமார் அங்கு கிடந்த புல் வெட்டும் அரிவாளால் அருள்குமார் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் மொளசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து நேற்று காலை சுரேஷ்குமாரை கைது செய்தார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com