பெயிண்டர் தற்கொலை

வேடசந்தூர் அருகே பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெயிண்டர் தற்கொலை
Published on

திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 39). பெயிண்டர். இவரும், வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி காந்திநகரை சேர்ந்த காளீஸ்வரி (28) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் கல்வார்பட்டியில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது சதீஷ்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com