பெயிண்டர் தற்கொலை

பழனி அருகே பெயிண்டர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பெயிண்டர் தற்கொலை
Published on

சத்திரப்பட்டி முல்லைநகரை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 46). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் உள்ளனர். ராஜதுரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்துடன் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு குடிபெயர்ந்துவிட்டார். இருப்பினும் சத்திரப்பட்டியில் அவருக்கு சொந்தமான வீடு இருந்தது. இந்தநிலையில் ராஜதுரை கடந்த வாரம் சத்திரப்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். இங்கேயே தங்கியிருந்த அவர் நேற்று முன்தினம் மாலை விஷத்தை குடித்தார். இதில், மயங்கி விழுந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com