வடமதுரை அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை

வடமதுரை அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
வடமதுரை அருகே பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை
Published on

திண்டுக்கல் அருகே உள்ள பெரியகோட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34). பெயிண்டர். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் செந்தில்குமாருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் மனவேதனை அடைந்த செந்தில்குமார் விஷத்தை குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து செந்தில்குமாரின் தந்தை அழகர் கொடுத்த புகாரின்பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com