பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை

பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை
பெயிண்டர் விஷம் குடித்து தற்கொலை
Published on

திங்கள்சந்தை:

இரணியல் போலீஸ் சரகம் கண்டன்விளை அருகே பண்டாரவிளையை சேர்ந்தவர் சிலுவைராயன். இவரது மகன் ஜெஸ்டின் அருள்ஜோஸ் (வயது37) பெயிண்டர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தாய் தந்தை இறந்து விட்டதால் பண்டாரவிளையில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலையில் இவர் விஷம் குடித்த நிலையில் வீட்டில் கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அருள்ஜோஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com