குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் பெயிண்டர் தற்கொலை

குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் பெயிண்டர் தற்கொலை
Published on

திருவள்ளூர் அடுத்த கீழச்சேரி அந்தோணியார்புரம் சவேரியார் தெருவை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (வயது 37). பெயிண்டர். இவருக்கு திருமணமாகி ஆரோக்கியமாள் (30) என்ற மனைவியும், சஞ்சனா (9) என்ற மகளும், யஸ்வந்த் (7) என்ற மகனும், உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் குடிப்பழக்கம் கொண்ட அந்தோணிராஜ் அடிக்கடி குடித்துவிட்டு தனது மனைவியுடன் சண்டையிட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த மாதம் ஏற்பட்ட தகராறு முற்றவே, ஆரோக்கியம்மாள் கணவருடன் கோபித்துக் கொண்டு 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அதே ஊரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தனியாக வீட்டில் இருந்த அந்தோணிராஜ் மனைவி மற்றும் பிள்ளைகள் பிரிந்து சென்ற ஏக்கத்தில் தன் அறைக்குச் சென்று அங்கு மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து அவரது மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஆரோக்கியம்மாள் மப்பேடு போலீசில் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பறி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com