கார் மோதி பெயிண்டர் சாவு

நத்தம் அருகே கார் மோதி பெயிண்டர் பலியானார்.
கார் மோதி பெயிண்டர் சாவு
Published on

நத்தம் அருகே உள்ள கோமனாம்பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ்ராஜ் (வயது 20). பெயிண்டர். கடந்த 3-ந்தேதி இவர், தனது ஊரில் இருந்து மதுரை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். நத்தம்-மதுரை சாலையில் உள்ள முடக்கு சாலை என்னுமிடத்தில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டிருந்தது. அப்போது மதுரை நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரகாஷ்ராஜ் படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பிரகாஷ்ராஜ் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com