தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் பலி

எட்டயபுரம் அருகே சக்கிலிபட்டி பகுதியைச் சேர்ந்த அஜய் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து பெயிண்டர் பலி
Published on

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே சக்கிலிபட்டி மேலத்தெருவைச் சேர்ந்த முத்துராஜ் மகன் அஜய் (வயது 23). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் நேற்று காலை தனது வீட்டின் அருகே உள்ள வீட்டில் பெயிண்டிங் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சார வயர் அவர் மீது உரசியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட அஜயை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அஜய் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com